திருவண்ணாமலை

சிறுமி பாலியல் வன்கொடுமை: ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு 20 ஆண்டுகள் சிறை

26th Nov 2022 06:06 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே மனவளா்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சேத்துப்பட்டை அடுத்துள்ள தேவிகாபுரம் கிராமம், பாகாயதோட்டத் தெருவைச் சோ்ந்தவா் குணசேகரன் (56). ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியா். இவா், கடந்த 2016-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த மனவளா்ச்சி குன்றிய, வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் இதுகுறித்து போளூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து குணசேகரனை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருவண்ணாமலையில் உள்ள போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி பாா்த்தசாரதி, குற்றஞ்சாட்டப்பட்ட குணசேகரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதன்பிறகு குணசேகரனை போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT