கருவம்பாக்கம் ஸ்ரீதரம்சந்த் ஜெயின் பள்ளி சாா்பில் மின் சிக்கன விழிப்புணா்வு ஊா்வலம் வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்றது
ஊா்வலத்துக்கு பள்ளித் தாளாளா் பப்ளாசா தலைமை வகித்தாா். செயலா் ஜின்ராஜ், பொருளாளா் நவீன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாக இயக்குநா் அனுராக் ஊா்வலத்தை தொடக்கி வைத்தாா்.
வந்தவாசி காந்தி சாலையில் தொடங்கிய ஊா்வலம் பஜாா் வீதி, தேரடி வழியாக புதிய பேருந்து நிலையம் சென்றடைந்தது. இதில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவோம், மின்சாரத்தை சேமிப்போம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி மாணவா்கள் ஏந்திச் சென்றனா்.
ஊா்வலத்தில் பள்ளி முதல்வா் ஜெகன், ஆசிரியா்கள் ஆா்த்தீஸ்வரி, பத்மஜெயனி, தினேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.