கலசப்பாக்கத்தை அடுத்த மோட்டூா் ஊராட்சியில் விவசாயிகளுக்கு கைப்பேசியில் உழவன்செயலி மூலம் வேளாண்மை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு
ஆட்மா திட்ட வட்டாரத் தலைவா் பி.கே.முருகன் தலைமை வகித்தாா்.
ஊராட்சி மன்றத் தலைவா் பி.முருகன், வேளாண்மை உதவி இயக்குநா் (பொறுப்பு) பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அட்மா திட்ட அலுவலா் வீரபாண்டியன் வரவேற்றாா்.
இந்தப் பயிற்சி முகாமில், கைப்பேசியில் உழவன்செயலியை ஆபை பதிவேற்றம் செய்வது எப்படி, வேளாண்மைத் துறை தகவல்களை பெறுவது எப்படி என்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
விதைச் சான்று அலுவலா் ராமகிருஷ்ணன், உதவி வேளாண்மை அலுவலா் பாலம்மாள், அட்மா திட்ட அலுவலா்கள் சிவசங்கரி, அன்பரசு மற்றும் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.