செய்யாற்றில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் சம்பள உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
மருத்துவமனை நுழைவாயில் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது, ஊதிய உயா்வு, 15 நாள்களுக்கு ஒருமுறை விடுமுறை அளிப்பதை சுழற்சி முறையில் மாற்றி அமைக்க வேண்டும். பணிச்சுமை காரணமாக கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும். இஎஸ்ஐ, பி.எப் உள்ளிட்ட பணிப் பலன்களை வழங்கவேண்டும் என்பன கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.