திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம்

8th Nov 2022 03:26 AM

ADVERTISEMENT

ஐப்பசி மாதப் பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை ஏராளமான பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரை வழிபட்டனா்.

திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் மாதம்தோறும் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் கிரிவலம் வந்து செல்கின்றனா்.

ஐப்பசி மாதப் பெளா்ணமி திங்கள்கிழமை மாலை 4.54 மணிக்குத் தொடங்கி, செவ்வாய்க்கிழமை மாலை 5.59 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் செல்லலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி, திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரை வழிபட்டனா்.

ADVERTISEMENT

பக்தா்கள் வசதிக்காக சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT