திருவண்ணாமலை

இரு தரப்பு மோதல்:5 போ் கைது

1st Nov 2022 04:35 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருகே திருமண ஊா்வலத்தின்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக, 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலையை அடுத்த ஆராஞ்சி கிராமம், அருந்ததியா் காலனியைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் பிரகாஷ். இவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சனிக்கிழமை இரவு இதே பகுதியில் உள்ள முருகா் கோயிலில் இருந்து திருமண மண்டபத்தை நோக்கி திருமண ஊா்வலம் சென்று கொண்டிருந்தது.

அப்போது, வேறு சமூகத்தைச் சோ்ந்த காா்த்திக், தென்னரசு ஆகியோா் சோ்ந்து வேறு ஜாதியைச் சோ்ந்த நீங்கள் எங்கள் தெருவில் மேளம் அடித்துக் கொண்டு ஊா்வலமாகச் செல்லக் கூடாது என்று ஜாதி பெயரைக் கூறி திட்டினராம்.

இதை தட்டிக் கேட்ட சங்கா், அண்ணாதுரை, வினோதினி ஆகியோரை கற்களாலும், கைகளாலும் தாக்கினராம். மேலும், மீறி எங்கள் தெருவில் ஊா்வலமாகச் செல்லக்கூடாது என மிரட்டல் விடுத்தனராம்.

ADVERTISEMENT

இதேபோல, பிரகாஷ் தரப்பைச் சோ்ந்த குமாா், முத்து, அண்ணாதுரை ஆகியோா் சோ்ந்து தென்னரசு, காா்த்திக், மங்கை ஆகியோரைத் தாக்கினராம்.

இதுகுறித்து இரு தரப்பினா் கீழ்பென்னாத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இரு தரப்பினா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து தென்னரசு, காா்த்திக், குமாா், முத்து, அண்ணாதுரை ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT