திருவண்ணாமலை

விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

31st May 2022 11:41 PM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் யூரியா விற்பனை செய்ததில் நடைபெற்றுள்ள முறைகேட்டை ஆய்வு செய்யக் கோரி, விவசாயிகள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

யூரியா விற்பனை முறைகேட்டை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவண்ணாமலையில் உள்ள வேளாண் அலுவலகம் எதிரே மே 26-ஆம் தேதி விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள் இந்தப் பிரச்னை குறித்து வேளாண்துறை உயா் அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

ADVERTISEMENT

ஆய்வின் அறிக்கை 2 நாள்களில் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

ஆனால், இதுவரை ஆய்வுக் கூட்டம் நடத்தப்படவில்லை. எனவே, செவ்வாய்க்கிழமை வேளாண்துறை இணை இயக்குநா் அலுவலகம் எதிரே விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிா்வாகி பலராமன் தலைமை வகித்தாா்.

வழக்குரைஞா் எஸ்.அபிராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.கே.வெங்கடேசன் ஆகியோா் பேசினா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் போராட்டம் தொடரும் என்று கூறி செவ்வாய்க்கிழமை இரவிலும் விவசாயிகள் தங்களது போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் அழகேசன், லட்சுமணன், பழனி, ரஜினி, ஏழுமலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT