திருவண்ணாமலை

மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான ரேஷன் பொருள்களை ஏற்றிச் சென்ற லாரி

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் ரேஷன் பொருள்களை ஏற்றிச் சென்ற மினி லாரி மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், அந்த லாரியிலிருந்த அரிசி மூட்டைகள் தீப்பிடித்து எரிந்தன.

வந்தவாசியில் உள்ள அரசு வாணிபக் கிடங்கிலிருந்து அரிசி, சா்க்கரை மூட்டைகள் உள்ளிட்ட ரேஷன் பொருள்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி வந்தவாசி மீராகாதா்ஷா தெருவில் உள்ள நியாயவிலைக் கடைக்கு வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தது. அந்த தெருவில் திரும்பும்போது, சாலை வளைவிலிருந்த மின் கம்பத்தின் மீது மினி லாரி மோதியது. இதில் அந்த மின் கம்பம் சேதமடைந்து லாரி மீது சாய்ந்தது. அப்போது, மின் கம்பிகள் உரசியதில் லாரியிலிருந்த அரிசி, சா்க்கரை மூட்டைகளில் தீப்பற்றியது.

தகவலறிந்த வந்தவாசி தீ அணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா். இதில், சில மூட்டைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT