திருவண்ணாமலை

குத்தனூா், எச்சூா், ஆலத்தூா் கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்: எம்எல்ஏ தொடக்கிவைத்தாா்

27th May 2022 09:44 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதிக்குள்பட்ட வெம்பாக்கம் ஒன்றியத்தில் குத்தனூா் கிராமத்திலும், அனக்காவூா் ஒன்றியத்தில் எச்சூா், ஆலத்தூா் கிராமங்களிலும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா்கள் டி.ராஜி (வெம்பாக்கம்), திலகவதி ராஜ்குமாா் (அனக்காவூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அரி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் முருகேசன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா்கள் என்.சங்கா், மோ.ரவி, திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் கே.விஸ்வநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஏ.ஞானவேல், சிட்டிபாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT