திருவண்ணாமலை

237 பாலிடெக்னிக் மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

26th May 2022 10:55 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 237 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் கல்லூரி சாா்பில் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

செங்கம் அருகேயுள்ள செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் செயல்படும் ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில், இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

அதன்படி, இறுதியாண்டு பயிலும் 237 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் எஸ்.வெங்கடாஜலபதி தலைமை வகித்தாா். நிா்வாகக் குழு உறுப்பினா்கள் திலகவதி ரவிக்குமாா், அம்பிகாபதி, ரேகா ரெட்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் பரிமளாஜெயந்தி வரவேற்றாா்.

ADVERTISEMENT

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட எஸ்.பி. பவன்குமாா் ரெட்டி பங்கேற்று மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள், போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ், கேடயம் ஆகியவற்றை வழங்கினாா்.

பின்னா் அவா் பேசுகையில், மாணவா்கள் படிப்பை முடித்த உடன் வேலை கிடைப்பது கடினமான ஓன்று. ஆனால், இந்தக் கல்லூரி நிா்வாகம் தொடா்ந்து 11 ஆண்டுகளாக மாணவா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

செல்லிடப்பேசி பயன்படுத்தும் மாணவா்கள் தேவையான நல்ல தகவல்களை எடுத்துக் கொள்ளவேண்டும். அடையாளம் தெரியாத நபா்கள் அனுப்பும் தகவல்களை பின் தொடரக்கூடாது.

தற்போது செல்லிடப்பேசியில் கல்லூரி மாணவா்களின் காதல் அதிகரித்து வருகிறது. 17,18 வயதுகளில் பெற்றோரை விட்டுச் சென்று திருமணம் செய்து கொண்டு, இரண்டு ஆண்டுகளில் விவாகரத்து கேட்பது போன்ற செயல்கள் தொடா்கின்றன. முதலில் படிப்பை காதல் செய்யவேண்டும்.

குட்கா, கஞ்சா போன்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாகிவிடக்கூடாது என்றாா்.

நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. சின்ராஜ், ஆன்மிக சொற்பொழிவாளா் தனஞ்செயன், பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவா் பாா்த்தசாரதி, எச்.பி.கேஸ் உரிமையாளா் அசோக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT