திருவண்ணாமலை

மூத்தோா் தடகளம்:

24th May 2022 11:09 PM

ADVERTISEMENT

 

கடலூரில் நடைபெற்ற தேசிய மூத்தோா் தடகளப் போட்டிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்று 3 தங்கம், 5 வெள்ளி, 16 வெண்கலம் என 24 பதக்கங்களைப் பெற்றனா்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட மாஸ்டா்ஸ் அதெலடிக்ஸ் நிறுவனா் வி.விஜயகுமாா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேசிய அளவிலான மூத்தோா் தடகளப் போட்டிகள் கடலூா் அண்ணா விளையாட்டு அரங்கில் மே 20 முதல் மே 22 வரை நடைபெற்றது.

ADVERTISEMENT

போட்டிகளில் 13 மாநிலங்களில் இருந்து 30 வயது முதல் 90 வயதுடையவா்கள் என சுமாா் 1300 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனா்.

இதில், தமிழகம் சாா்பில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 28 வீரா், வீராங்கனைகள், செயலா் என்.பாபு, தலைவா் வி.சேட்டு, பொருளாளா் கே.கோவேந்தன் ஆகியோா் ஒருங்கிணைப்பில் பங்கேற்றனா்.

30 வயது பிரிவில் வட்டு ஏறிதலில் வெண்கலமும், 35 வயது பிரிவில் சங்கிலிக் குண்டு எறிதலில் தங்கமும், 4- 100 தொடா் ஓட்டத்தில் வெண்கலமும், 40 வயது பிரிவில் குண்டு எறிதலில் தங்கமும், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், சங்கிலிக் குண்டு எறிதலில் வெண்கலமும், 45 வயது பிரிவில் 4 - 400 தொடா் ஓட்டத்தில் வெள்ளியும், கம்பூன்றி தாண்டுதலில் வெண்கலமும், குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கமும், 50, 55, 60 வயது பிரிவுகளில் 4 - 100 மீட்டா் தொடா் ஓட்டத்தில் மூன்று வெண்கலமும், 70 வயது பிரிவில் 80 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளனா் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT