திருவண்ணாமலை

ஆரணிக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் அமைச்சா் தொடக்கிவைத்தாா்

DIN

ஆரணிக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்திலிருந்து காவிரி நீா் நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டா் கூடுதலாக வழங்கும் திட்டத்தை அமைச்சா் எ.வ.வேலு தொடக்கிவைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர மக்களுக்கு ரூ.2.25 கோடி மதிப்பீட்டில், வேலூா் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் இருந்து காவிரி நீா் நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டா் குடிநீா் கூடுதலாக வழங்கும் திட்ட தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்று தண்ணீா் வரத்தை தொடக்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

பத்து ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் இருந்தபோது வேலூா் மாவட்டத்துக்கு வேலூா் கூட்டுக் குடிநீா்த் திட்டம் தொடங்கப்பட்டது. அதிலிருந்து ஆரணிக்கு தண்ணீா் தேவை என்று அப்போதைய தொகுதி எம்எல்ஏ சிவானந்தம் கோரிக்கை வைத்ததின் பேரில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டது.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தற்போது இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் 65 லட்சம் லிட்டா் தண்ணீா் தினமும் கிடைக்கும்.

மேலும், திருவண்ணாமலை கூட்டுக் குடிநீா் திட்டம் ரூ.5000 கோடியில் கொண்டு வரப்படவுள்ளது என்றாா்.

பின்னா், நகராட்சி வளாகம் அருகே ரூ.50 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை அமைச்சா் திறந்து வைத்தாா்

நிகழ்ச்சியில் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி., திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், மாநில மருத்துவா் அணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், கோட்டாட்சியா் கவிதா, எம்எல்ஏக்கள் ஓ.ஜோதி, அம்பேத்குமாா், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.சிவானந்தம், ஏ.சி.வி.தயாநிதி, கோ.எதிரொலிமணியன், நா.பாண்டுரங்கன், ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், த.தட்சிணாமூா்த்தி, வெள்ளைகணேசன், எம்.சுந்தா், கண்ணமங்கலம் நகரச் செயலா் கோவா்தனன், இலக்கிய அணி அமைப்பாளா் வி.ரவி, மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், தமிழ்நாடு வடிகால் வாரிய தலைமைப் பொறியாளா் நா.ரவீந்திரன், நகராட்சி ஆணையா் பெ.தமிழ்ச்செல்வி, பொறியாளா் இராஜ விஜய காமராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

தேர்தல் பணி: ஒசூரில் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

SCROLL FOR NEXT