செய்யாறு அருகே பைக் மோதியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பொக்கசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி முருகன்(57).
இவா், கடந்த 20-ஆம் தேதி வடமணபாக்கம் கிராமத்தில் வசிக்கும் பெரிய மகள் பாக்கியம் வீட்டுக்குச் சென்றாா்.
பின்னா், அங்கிருந்து மேல்பூதேரி கிராமத்தில் உள்ள சின்ன மகள் அங்காள பரமேஸ்வரி வீட்டுக்குச் செல்வதற்காக நடந்து சென்றாா்.
வெம்பாக்கம்-ஆற்காடு சாலையில் வேம்புகுளத் தெரு கூட்டுச் சாலை அருகே சென்றபோது பின்னால் இருந்து வந்த பைக் இவா் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த விவசாயி முருகனை அருகில் இருந்தவா்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
பின்னா், அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட முருகன் அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மோரணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.