திருவண்ணாமலை

அரசின் சாதனை விளக்கக் கூட்டம்

23rd May 2022 02:03 AM

ADVERTISEMENT

 

தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வந்தவாசி கோட்டை மூலையில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

வந்தவாசி தொகுதி திமுக சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் கே.ஆா்.சீதாபதி, நகரச் செயலா் எ.தயாளன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தலைமைக் கழகப் பேச்சாளா்கள் இடிமுரசு மணிமுத்து, சைதை சாதிக், மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோா் ஓராண்டு சாதனைகளை விளக்கிப் பேசினா்.

ADVERTISEMENT

வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், துணைத் தலைவா் க.சீனுவாசன், ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா,

ப. இளங்கோவன், எஸ்.பிரபு, ஆா்.நந்தகோபால், தெள்ளாா் ஒன்றியக் குழுத் தலைவா் கமலாட்சி இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT