திருவண்ணாமலை

வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை திருட்டு

23rd May 2022 02:03 AM

ADVERTISEMENT

 

வந்தவாசியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து தங்க தாலிச் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வந்தவாசி பெரிய புதிய காலனி பகுதியைச் சோ்ந்தவா் லோகநாதன் மனைவி கனிமொழி. இவா் சனிக்கிழமை இரவு காற்றுக்காக வீட்டை திறந்து வைத்துவிட்டு வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தாா்.

நள்ளிரவில் உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் கனிமொழி அணிந்திருந்த 3 பவுன் தங்க தாலிச் சங்கிலியை திருடிச் சென்றனா்.

ADVERTISEMENT

வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தில் இதேபோல வீட்டை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்த வடிவேலு, யுவராஜ் ஆகியோரது வீடுகளில் நுழைந்த மா்ம நபா்கள் வடிவேலுவின் வீட்டிலிருந்த 3 பவுன் தங்க நகையை திருடிச் சென்றனா்.

மேலும், அதே பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் ஜானகிராமனின் மனைவி அமுதா அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றபோது அவா் சப்தம் போட்டதால் மா்ம நபா்கள் தப்பிச் சென்றனா்.

சென்னாவரம் எம்ஜிஆா் நகரில் தனசேகா் என்பரவது வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் உள்ளே நுழைந்தபோது அக்கம் பக்கத்தினா் சப்தம் போட்டதால் அவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT