திருவண்ணாமலை

டிராக்டா் கவிழ்ந்து விபத்து:முதியவா் பலி

23rd May 2022 02:02 AM

ADVERTISEMENT

 

கீழ்பென்னாத்தூா் அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவா் பலியானாா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த நாரியமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி ரங்கநாதன் (65).

இவா், சனிக்கிழமை இரவு டிராக்டரில் நாரியமங்கலம் கிராமத்தில் இருந்து அவலூா்பேட்டைக்குச் சென்றாா். மீண்டும் டிராக்டரிலேயே வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.

ADVERTISEMENT

நாரியமங்கலம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த ரங்கநாதனை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ரங்கநாதன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT