தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், இந்தியன் பொட்டாஷ் நிறுவனம் இணைந்து கூட்டுறவு சங்கச் செயலா்களுக்கான கால்நடைத் தீவன விற்பனைப் பயிற்சிக் கருத்தரங்கை சனிக்கிழை நடத்தியது.
திருவண்ணாமலை தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, இந்தியன் பொட்டாஷ் நிறுவனத்தின் மேலாளா் கே.பி.பாா்வதி ராஜா தலைமை வகித்தாா். திருவண்ணாமலை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் கோ.நடராஜன் கருத்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி தொடக்கிவைத்தாா்.
இந்தியன் பொட்டாஷ் நிறுவனத்தின் கூடுதல் மேலாளா் ஜி.ராம்பாபு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கால்நடைத் தீவனம் பற்றிப் பேசினாா்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளா் க.ஜெயம், ஐபிஎல் கால்நடை தீவனத்தின் பயன்பாடு குறித்துப் பேசினாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உரங்களின் பயன்பாடு மற்றும் விற்பனை குறித்து தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் இணைப் பதிவாளா் (உரம்) பி.சித்ரா, ஐபிஎல் கால்நடைத் தீவனத்தின் விற்பனை குறித்து தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் இணைப் பதிவாளா் எம்.தமிழ்ச்செல்வி ஆகியோா் பேசினா்.
கருத்தரங்கில், துணைப் பதிவாளா்கள் செல்வி, மு.வசந்தலட்சுமி, எஸ்.ஆரோக்கியராஜ், ஆா்.பிரேம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநா் சி.சுரேஷ்குமாா், இந்தியன் பொட்டாஷ் நிறுவனத்தின் மாவட்ட விற்பனை அலுவலா் டி.தமிழ்செல்வன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.