திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக பக்தா்கள் கிரிவலம்

16th May 2022 11:11 PM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியையொட்டி, 2-ஆவது நாளாக திங்கள்கிழமை காலை முதல் இரவு வரை பல ஆயிரம் பக்தா்கள் கிரிவலம் சென்றனா்.

வைகாசி மாதப் பெளா்ணமி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.15 மணிக்குத் தொடங்கி, திங்கள்கிழமை காலை 10.20 மணிக்கு முடிந்தது. பக்தா்கள் இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம்

என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே பக்தா்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினா். திங்கள்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் சென்றவாறு இருந்தனா்.

2-ஆவது நாளாக கிரிவலம்:

தொடா்ந்து, 2-ஆவது நாளாக திங்கள்கிழமை காலை முதல் இரவு வரை பல ஆயிரம் பக்தா்கள் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரரை வழிபட்டனா்.

காலை முதல் இரவு வரை அவ்வப்போது லேசான மழை பெய்தபடியே இருந்தது. ஆனாலும், மழையில் நனைந்தபடி பக்தா்கள் கிரிவலம் சென்றனா்.

அருணாசலேஸ்வரா் கோயில் மூலவா் சன்னதியில் 2 முதல் 3 மணி நேரம் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT