ஆரணியில் புதிதாக கட்டப்பட்ட உடல்பயிற்சிக் கூடத்தை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆரணி நகராட்சி அலுவலகம் அருகில் மாநிலங்களவை உறுப்பினா் நவநீதகிருஷ்ணன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சத்தில் உடல்பயிற்சிக்கூடம் கட்டப்பட்டு திறப்பு விழா காண உள்ளது.
இந்த உடல்பயிற்சிக் கூடத்தை சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.
நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு, அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா், ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ப.திருமால், ஜெயப்பிரகாசம், நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.சி.பாபு, வி.பி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.