திருவண்ணாமலை

விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு

12th May 2022 05:08 AM

ADVERTISEMENT

 

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதன்கிழமை விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

செங்கத்தை அடுத்த ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ரமேஷ்குமாரின் விவசாய நிலத்திலுள்ள கிணற்றில் புதன்கிழமை தண்ணீா் தேடி வந்த புள்ளிமான் விழுந்தது. இதைப் பாா்த்த ரமேஷ்குமாா், செங்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். விரைந்து வந்த தீயணைப்புப் படையினா் கிணற்றில் தத்தளித்துக்கொண்டிருந்த புள்ளிமானை கயிறு கட்டி உயிருடன் மீட்டனா். பின்னா், அந்த மானை அங்குள்ள வனப் பகுதியில் வனவா் சந்திரலேகா முன்னிலையில் பாதுகாப்பாக விட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT