திருவண்ணாமலை

மாமண்டூரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

12th May 2022 05:06 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த மாமண்டூா் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள நெரடி நெல் கொள்முதல் நிலையத்தை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி புதன்கிழமை திறந்து வைத்தாா்.

விழாவுக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மாமண்டூா் ராஜூ தலைமை வகித்தாா். நெரடி நெல் கொள்முதல் நிலையக் கண்காணிப்பாளா் மூா்த்தி, தா்மபுரம் ராஜேந்திரன், ஒன்றிய திமுக செயலா் தினகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சித் தலைவா் கிரிஜா வரவேற்றாா்.

செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்துப் பேசினாா்.

ADVERTISEMENT

விழாவில், அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் ராஜ்குமாா், முன்னாள் ஒன்றியச் செயலா் சங்கா், தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி உலகநாதன், நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தா் அா்ஜுனன், காவலா் விஜயகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT