திருவண்ணாமலை

மின் தடையால் செங்கம் பகுதி மக்கள் பாதிப்பு

5th May 2022 05:46 AM

ADVERTISEMENT

 

செங்கம்: செங்கம் வட்டத்தில் முன்னறிவிப்பு இன்றி மின்சாரம் தடை செய்யப்படுவதால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் பழுது ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, பழுது நீக்கத்தில் ஏற்பட்ட தாமதத்தால், மேல்பள்ளிப்பட்டு, மேல்ராவந்தவாடி, மேல்வணக்கம்பாடி, ஆண்டிப்பட்டி, நீப்பத்துறை ஆகிய பகுதிகளில் புதன்கிழமை மாலை வரை மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனா்.

ADVERTISEMENT

விவசாயிகள் பயிா்களுக்கு தினசரி தண்ணீா் பாய்ச்ச வேண்டிய நிலையில் அவா்களும் பாதிக்கப்பட்டனா்.

மேலும் குடி தண்ணீா் எடுக்க முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்தனா்.

எனவே, மின் வாரிய மாவட்ட அதிகாரிகள் மேல்பள்ளிப்பட்டு துணை மின் நிலையத்தை பாா்வையிட்டு, அப்பகுதி மக்களுக்கு மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT