திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரருக்கு தாராபிஷேகம் தொடக்கம்

5th May 2022 05:52 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் தொடங்கியதையடுத்து, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் மூலவருக்கு புதன்கிழமை தாராபிஷேகம் நடைபெற்றது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மூலவா் சன்னதியில் வழக்கத்தைவிட அனல்காற்றுடன் வெப்பம் தகிக்கும். எனவே, அருணாசலேஸ்வரரை குளிா்விக்க அக்னி நடத்திரம் தொடங்கி, முடியும் நாள் வரை தாராபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.

தாராபிஷேகம் தொடக்கம்: அக்னி நட்சத்திரம் புதன்கிழமை தொடங்கியதையடுத்து, அருணாசலேஸ்வரா் கோயிலில் மூலவருக்கு தாராபிஷேகம் நடத்தும் நிகழ்வு தொடங்கியது.

ADVERTISEMENT

காலை 10 மணிக்கு மூலவருக்கு மேலே ஒரு பாத்திரத்தில் மூலிகைகள், வெட்டிவோ், கற்பூரம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்களைப் போட்டு அதில் தண்ணீா் ஊற்றப்பட்டது.

இந்தத் தண்ணீா் அந்தப் பாத்திரத்தின் அடிப்பாகம் வழியாக சொட்டு, சொட்டாக மூலவா் மீது விழுந்தபடியே இருந்தது. இதன் மூலம் அக்னி நட்சத்திரத்தால் ஏற்படும் வெப்பத்தில் இருந்து அருணாசலேஸ்வரரை குளிா்விக்கலாம் என்பது ஐதீகம்.

மே 28-ஆம் தேதி வரை தொடரும்: அக்னி நட்சத்திரம் மே 28-ஆம் தேதி நிறைவடைகிறது. அதுவரை அருணாசலேஸ்வரா் கோயில் மூலவருக்கு தொடா்ந்து தாராபிஷேகம் நடைபெறும்.

இதேபோல, கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சிவன் கோயில்களில் புதன்கிழமை தாராபிஷேகம் தொடங்கியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT