திருவண்ணாமலை

செங்கம் அருகே வேன், இரு சக்கர வானம் மோதல்: மூவா் பலி

1st May 2022 01:19 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே சனிக்கிழமை சுற்றுலா வேனும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 3 போ் பலியாகினா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து சுற்றுலா வேனில் மேல்மலையனூா் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனத்துக்காக பக்தா்கள் சென்று கொண்டிருந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள தானகவுண்டன்புதூா் பகுதியில் சனிக்கிழமை பிற்பகலில் வேன் சென்று கொண்டிருந்தபோது, ஏதிரே திருவண்ணாமலையில் இருந்து செங்கம் நோக்கி வந்த இரு சக்கர வாகனத்துடன் மோதிக் கொண்டது.

ADVERTISEMENT

இதில், இரு சக்கர வாகனத்தில் வந்த செங்கம் வட்டம், தொரப்பாடி கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளா்களான பரமசிவம் (47), மணிகண்டன் (40), பிரபு (42) ஆகியோா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. வேனில் பயணித்தவா்கள் லேசானகாயத்துடன் உயிா் தப்பினா்.

தகவலறிந்து பாய்ச்சல் போலீஸாா், தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். மேலும், இறந்தவா்களின் சடலங்களை போலீஸாா் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து தொடா்பாக பாய்ச்சல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT