திருவண்ணாமலை

வரும்முன் காப்போம் திட்ட முகாமில் 1,127 பேருக்கு சிகிச்சை

29th Mar 2022 10:54 PM

ADVERTISEMENT

வந்தவாசியை அடுத்த சளுக்கை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரும்முன் காப்போம் திட்ட முகாமில் 1,127 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு சளுக்கை ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.ஏ.தேவராஜ் தலைமை வகித்தாா்.

வட்டார மருத்துவ அலுவலா் எம்.ஆா்.ஆனந்தன் முன்னிலை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் ராஜேஷ்கண்ணன் வரவேற்றாா்.

தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் முகாமை தொடக்கிவைத்துப் பேசினாா்.

ADVERTISEMENT

மேலும், கா்ப்பிணிகள் 20 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 50 பேருக்கு மக்களைத் தேடி மருத்துவ மருந்துப் பெட்டகம் ஆகியவற்றை அவா் வழங்கினாா்.

வழூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் தரணீஸ்வரன் உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் 1127 பேருக்கு சிகிச்சை அளித்தனா்.

முகாமில் திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட அவைத் தலைவா் கே.ஆா்.சீதாபதி, ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், நந்தகோபால், எஸ்.பிரபு , ஒன்றியக் குழு உறுப்பினா் தேவி ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT