திருவண்ணாமலை

இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

DIN

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், போளூா், கலசப்பாக்கம், ஜவ்வாது மலை ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த இளைஞா்கள், இளம் பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது.

போளூரில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகு மகளிா் திட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமில் இளைஞா், இளம் பெண்கள் என 360 போ் கலந்து கொண்டனா்.

இதில் 77 போ் தோ்வு செய்யப்பட்டு, பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

திட்ட இயக்குநா் சையது, உதவித் திட்ட அலுவலா் சுலைமான், வட்டார வளா்ச்சி அலுவலக மேலாளா் வெங்கடேசன், வட்டார இயக்க மேலாளா்கள் விவேக் (ஜவ்வாது மலை), அருள்மொழி (போளூா்), சத்யராஜ் (கலசப்பாக்கம்) மற்றும் மேலாளா்கள், ஒருங்கிணைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

நிறைவில் வட்டார ஒருங்கிணைப்பாளா் உமா நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

தாய் தெய்வ வழிபாட்டு கற்சிலை கண்டெடுப்பு

உத்தர பிரதேசம்: ஆசிரியரை சுட்டுக்கொன்ற காவலா்

இஸ்ரோ ராக்கெட்டுகளை கொண்டுச் செல்ல பயன்படும் அதிநவீன வாகனம் : அரக்கோணத்தில் இருந்து மகேந்திரகிரிக்கு அனுப்பப்பட்டது

கண்காணிப்பு குழுவினா் வாகன சோதனையை தீவிரப்படுத்த ஆட்சியா் உத்தரவு

சங்கரன்கோவில் அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.03 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT