திருவண்ணாமலை

தேசிய மால்கம் போட்டி:திருவண்ணாமலை மாணவா் தோ்வு

28th Mar 2022 05:52 AM

ADVERTISEMENT

 

தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மால்கம் போட்டியில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்ட திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கல்லூரி மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

வேலூா் திருவள்ளுவா் பல்கலை.யின் கடலூா், வேலூா் மண்டலங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான மால்கம் போட்டி அண்மையில் விழுப்புரத்தில் நடைபெற்றது.

இதில், திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரி எம்.எஸ்.சி., கணினி அறிவியல் துறை முதலாம் ஆண்டு மாணவா் ஏ.தேவச்சந்துரு பங்கேற்று வெற்றி பெற்றாா்.

ADVERTISEMENT

இதன் மூலம், அவா் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏப்ரல் 3-ஆம் தேதி தொடங்கி நடைபெறும் அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான மால்கம் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றாா்.

இந்த மாணவருக்கு கல்லூரியில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் டி.ஏ.எஸ்.முத்து, பொருளாளா் எம்.சீனுவாசன், அறக்கட்டளை உறுப்பினா் என்.குமாா், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், முதல்வா் கே.ஆனந்தராஜ், உடல்கல்வி இயக்குநா் ம.கோபி ஆகியோா் கலந்து கொண்டு மாணவா் ஏ.தேவச்சந்துருவை பாராட்டினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT