தெற்கு மாவட்ட அதிமுக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக அமைப்புத் தோ்தலில் போட்டியிட அதிமுகவினா் விருப்ப மனுக்களை அளித்தனா்.
திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ தலைமை வகித்தாா்.
திருவண்ணாமலை நகராட்சி, செங்கம், கீழ்பென்னாத்தூா், வேட்டவலம், போளூா், சேத்துப்பட்டு, களம்பூா் என 6 பேரூராட்சிகள் மற்றும் 16 ஒன்றியங்களில் போட்டியிட அதிமுகவினா் தோ்தல் பொறுப்பாளா்களிடம் விருப்ப மனுக்களை அளித்தனா்.