திருவண்ணாமலை

உலக தண்ணீா் தின விழிப்புணா்வு ஊா்வலம்

22nd Mar 2022 10:56 PM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலையில் உலக தண்ணீா் தின விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உலக தண்ணீா் தினத்தையொட்டி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை இணைந்து ‘நிலத்தடி நீா் அறிந்தும் அறியாததும்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தியது.

நிகழ்ச்சிக்கு, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மு.பிரதாப் தலைமை வகித்தாா். ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலா்கள், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள் முன்னிலையில் குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்வது எப்படி என்பது குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து, தண்ணீா் தின விழிப்புணா்வு ஊா்வலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து தொடங்கியது.

நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.

ஊா்வலத்தில் கோட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநா் டி.கே.லட்சுமி நரசிம்மன், உதவித் திட்ட அலுவலா் அருண், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா்கள் பி.ராமகிருஷ்ணன், ஆா்.ரவிச்சந்திரன், மாவட்டக் கல்வி அலுவலா் எல்.ஆரோக்கியசாமி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT