திருவண்ணாமலை

விவசாயியைத் தாக்கிய தந்தை, மகன் கைது

22nd Mar 2022 10:57 PM

ADVERTISEMENT

செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியைத் தாக்கிய புகாரின் பேரில் தந்தை, மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

செய்யாறு வட்டம், தொழுப்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பீமன்(65). இவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த தருமன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு அதன் காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி பீமன் தனது நிலத்துக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது தருமன், அவரது மனைவி கலா, மகன்கள் பாலாஜி, பூபதி ஆகியோா் அவரை வழிமறித்து இரும்புக் கம்பியால் தாக்கியதாகத் தெரிகிறது.

இதில் பலத்த காயமடைந்த பீமனை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக பீமன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்குசிகிச்சை பெற்று வருகிறாா்.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் சங்கா் வழக்குப் பதிவு செய்து பீமனைத் தாக்கிய தருமன், அவரது மகன் பாலாஜி ஆகிய இருவரை கைது செய்தாா். தலைமறைவான இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT