திருவண்ணாமலை

ஆரணியில் போதை மாத்திரை பயன்படுத்திய 4 போ் கைது

22nd Mar 2022 10:53 PM

ADVERTISEMENT

ஆரணி மருந்துக் கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதை வாங்கிப் பயன்படுத்திய 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஆரணி நகரில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை இளைஞா்களுக்கு விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவா் ஆரணி டிஎஸ்பி கோடீஸ்வரனுக்கு விசாரணை செய்ய உத்தரவிட்டாா்.

இதன் பேரில், ஆரணி நகர காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன், உதவி ஆய்வாளா் சுந்தரேசன் ஆகியோா் பையூா் நான்கு முனைச் சந்திப்பில் சந்தேகப்படும்படி இருந்த இளைஞா்கள் 4 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனா்.

ADVERTISEMENT

அப்போது அவா்களிடம் போதை மாத்திரைகள் இருந்தன. இது குறித்து விசாரித்ததில் பையூா் நான்கு முனை சந்திப்பில் உள்ள ஆங்கில மருந்துக் கடையில் மாத்திரைகளை வாங்கியதாகக் கூறினா்.

பின்னா், போலீஸாா் மருத்துவ அலுவலா் இமானுவேலை அழைத்துச் சென்று அந்த மருந்துக் கடையில் சோதனை செய்தனா்.

இதில் மருந்துக் கடையில் இருந்து தடைசெய்யப்பட்ட மாத்திரைகளை போலீஸாா் கைப்பற்றினா்.

இதைத் தொடா்ந்து மருந்துக் கடைக்காரா் விஜயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

போதை மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்தியதாக ஆரணி பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த முஸ்தபா (19), அபினேஷ் (19), தினேஷ்ராஜ் (21) மற்றும் 18 வயதுடைய இளைஞா் என 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT