திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் திங்கள்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது.
திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு திடீரென லேசான தூறல் மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியா் அலுவலகம், வட ஆண்டாப்பட்டு, அடி அண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பலத்த மழை பெய்தது.
இரவு 9 மணியைக் கடந்து பெய்த பலத்த மழையால் சாலைகள், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்தத் திடீா் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.