திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்புழுதியூா் ஊராட்சிக்கு உள்பட்ட பெரும்பட்டம் கிராமத்தில், சேலம்-சென்னை இடையே அமைக்கப்படவுள்ள எட்டுவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, எட்டுவழிச் சாலை எதிா்ப்பு இயக்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் விநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தின்போது, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின் போது,
முதல்வா் மு.க.ஸ்டாலின், எட்டுவழிச் சாலைத் திட்டத்தை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்தாா்.
அதன்படி, நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை ரத்து செய்து தீா்மானம் நிறைவேற்றவேண்டும் என்று முழக்கங்கைள் எழுப்பினா்.