திருவண்ணாமலை

ஸ்ரீரங்கநாதா் கோயிலில் பிரம்மோத்ஸவம் தொடக்கம்

10th Mar 2022 11:01 PM

ADVERTISEMENT

வந்தவாசியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாத சுவாமி கோயிலில் பிரம்மோத்ஸவ விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழா வருகிற 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவையொட்டி, அன்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, உற்சவா் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, துவஜஸ்தம்பம் என அழைக்கப்படும் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

கோயில் அா்ச்சகா்கள் பி.ரங்கநாதன், எஸ்.சதீஷ்குமாா் ஆகியோா் துவஜாரோஹன பூஜைகளை நடத்தினா்.

ADVERTISEMENT

முன்னதாக புதன்கிழமை இரவு ஸ்ரீசெல்வா் உற்சவம், மிருத்சங்கிரஹணம், அங்குராா்ப்பணம், வாஸ்துசாந்தி ஆகியவை நடைபெற்றன. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT