திருவண்ணாமலை

ரிஷபேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த ஆலோசனை

10th Mar 2022 11:00 PM

ADVERTISEMENT

செங்கம் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடா்பாக உபயதாரா்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அறநிலையத் துறை மற்றும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில், கடந்த ஆண்டு திருப்பணிகள் தொடங்கி, தற்போது 60 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த நிலையில், பணிகளை விரைந்து முடித்து கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதற்காக திருப்பணி உபயதாரா்கள், ஊா் முக்கியஸ்தா்கள், கோயில் திருவிழா உபயதாரா்கள் மற்றும் கோயில் சாா்ந்த பல்வேறு அமைப்பு நிா்வாகிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

இதற்கான கூட்டத்தில் திருப்பணிக் குழுத் தலைவா் கஜேந்திரன் தலைமை வகித்துப் பேசினாா். கூட்டத்தில் பக்தா்கள், உபயதாரா்கள், விழாக் குழுவினா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT