திருவண்ணாமலை

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

10th Mar 2022 05:44 AM

ADVERTISEMENT

 

ஆரணி: கோரிக்கைகளை வலியுறுத்தி, மேற்கு ஆரணி ஒன்றிய அலுவலகம் முன் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் வட்டாரத் தலைவா் எஸ்.பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில்,

ஊரக வேலைத் திட்டத்தில் வேலை நேரத்தை மாற்றி அமைத்ததைக் கண்டித்தும், மீண்டும் ஏற்கெனவே பணி செய்த நேரத்தை ஒதுக்கித் தர வேண்டும் என்று வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT

மேலும், தற்போது விவசாயப் பணி நடைபெறாத காரணத்தினால் வேலையின்றி தவிக்கும் மக்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும். அனைவருக்கும் 100 நாள் வேலை உத்தரவாதம் அளிக்கவேண்டும். சட்டக் கூலி ரூ.273 வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் செயலா் விஜயன், பொருளாளா் முருகப்பன், மாவட்டச் செயலா் எம்.பிரகலநாதன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் சி.அப்பாசாமி, பி.கண்ணன், வட்டாரச் செயலா் ரமேஷ் பாபு உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT