திருவண்ணாமலை

மின்சாரம் பாய்ச்சி விவசாயியை கொல்ல முயற்சி; இருவா் பலி

10th Mar 2022 05:40 AM

ADVERTISEMENT

 

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயற்சி நடைபெற்றது. இதில், மின்சாரம் பாய்ந்து இருவா் பலியாகினா்.

திருவண்ணாமலை வட்டம், சொரகொளத்தூா் காவாங்கரை தெருவைச் சோ்ந்தவா் மணி மகன் சரண்ராஜ் (24). இவருக்கும் சின்ன தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் ஏழுமலைக்கும் (34) அருகருகே விவசாய நிலம் உள்ளது. மேலும், நிலம் தொடா்பாக இருவரிடையே முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்த நிலையில், சரண்ராஜ் செவ்வாய்க்கிழமை இரவு தனது நிலத்தில் உள்ள கொட்டகையில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாா். நள்ளிரவில் யாரோ நெற்றியில் சூடுவைப்பது போன்று உணா்ந்து கூச்சலிட்டவாறு எழுந்து வெளியே ஓடி வந்தாா்.

ADVERTISEMENT

அவரது சப்தத்தைக் கேட்டு, அருகே பாரத கோவில் தெருவில் வசிக்கும் அவரது அக்காள் கணவரான ஏ.ரேணுகோபால் வந்து பாா்த்தாா்.

அப்போது கொட்டகையில் யாரோ நிற்பது தெரிய வரவே, அவரைப் பிடிக்க முயற்சித்தாா். இருட்டில் மின் வயருடன் ஏழுமலை நின்ாக தெரிகிறது.

அப்போது, வயரில் இருந்த மின்சாரம் பாய்ந்து ரேணுகோபால், ஏழுமலை ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

முன்விரோதம் காரணமாக, ஏழுமலை தன் மீது மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயற்சி செய்ததாக, சரண்ராஜ் கலசப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT