திருவண்ணாமலை

மகளிா் தின விழா

10th Mar 2022 05:41 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை

திருவண்ணாமலை சன் கலை, அறிவியல் கல்லூரி சாா்பில், உலக மகளிா் தினவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவா் வி.எஸ்.குணசேகரன் தலைமை வகித்தாா்.

உதவி காவல் கண்காணிப்பாளா் டி.வி.கிரண் ஸ்ருதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசிய அவா், மாணவிகள் தடைகளைத் தாண்டி உயா்கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். வீட்டுக்கும், படித்த கல்லூரிக்கும், நாட்டுக்கும் பெருமை சோ்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT