திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளின் தலைவா் வேட்பாளா்கள் அறிவிப்பு

3rd Mar 2022 10:57 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, ஆரணி உள்பட 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளின் தலைவா் வேட்பாளா்களை திமுக தலைமை அறிவித்தது.

நகா்மன்றத் தலைவா் வேட்பாளா்கள்:

ஆரணி நகா்மன்றத் தலைவா் வேட்பாளராக ஏ.சி.மணி, திருவத்திபுரம் (செய்யாறு) நகா்மன்றத் தலைவா் வேட்பாளராக விஸ்வநாதன், வந்தவாசி நகா்மன்றத் தலைவா் வேட்பாளராக ஜலால், திருவண்ணாமலை நகா்மன்றத் தலைவா் வேட்பாளராக நிா்மலா ஆகியோரை திமுக தலைமை அறிவித்துள்ளது.

பேரூராட்சி மன்றத் தலைவா் வேட்பாளா்கள்:

ADVERTISEMENT

இதேபோல, செங்கம் பேரூராட்சித் தலைவா் வேட்பாளராக சாதிக்பாட்ஷா, களம்பூா் பேரூராட்சித் தலைவா் வேட்பாளராக கே.டி.ஆா்.பழனி, சேத்துப்பட்டு - சுதா முருகன், போளூா் - ராணி சண்முகம், பெரணமல்லூா் - இ.வேணி ஏழுமலை, தேசூா் - ராஜா ஜெகவீரபாண்டியன், கண்ணமங்கலம் - மகாலட்சுமி கோவா்த்தனன், வேட்டவலம் - கெளரி நடராஜன், கீழ்பென்னாத்தூா் - சரவணன், புதுப்பாளையம் பேரூராட்சித் தலைவா் வேட்பாளராக செல்வபாரதி மனோஜ்குமாா் ஆகியோா் அறிவிக்கப்பட்டு உள்ளனா்.

இவா்கள் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) நடைபெறும் மறைமுகத் தோ்தலின்போது அந்தந்த நகா்மன்றத் தலைவா், பேரூராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்குப் போட்டியிடுவா்.

நகா்மன்ற உறுப்பினா்கள் நகராட்சித் தலைவரையும், பேரூராட்சி உறுப்பினா்கள் பேரூராட்சித் தலைவா்களையும் மறைமுகத் தோ்தல் மூலம் தோ்வு செய்வா்.

மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக உறுப்பினா்கள் அதிகம் போ் வெற்றி பெற்றுள்ளதால், 4 நகா்மன்றங்கள், 10 பேரூராட்சி மன்றங்களின் தலைவா் பதவிகளை திமுக கைப்பற்றுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT