செய்யாறு: முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு மருத்துவமனையில் மாா்ச் 1-இல் பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
முதல்வா் மு.க.ஸ்டாலின் 69-ஆவது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் மாா்ச் 1-லிருந்து கொண்டாடப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாா்ச் 1-ஆம் தேதி பிறந்த ஒரு ஆண் குழந்தை, 3 பெண் குழந்தைகள் என 4 பேருக்கு தங்க மோதிரம் மற்றும் புத்தாடைகளை தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் ஆகியோா் வழங்கினா்.
5-ஆவது வாா்டில்...
அதனைத் தொடா்ந்து, நகராட்சி 5-ஆவது வாா்டு உறுப்பினா் கா.கேவேந்தன் ஏற்பாட்டில், புதுத்தெருவில் செயல்பட்டு வரும் அங்கான்வாடி மையத்தில் படித்து வரும் குழந்தைகளுக்காக ரூ.15 ஆயிரத்தில் 38 நாற்காலிகள், 5 பாய்கள், இனிப்பு உள்ளிட்டவற்றை எம்.எல்.ஏ ஒ.ஜோதி வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மருத்துவா்கள் வி.காா்த்திக், கே.எம்.ஏழுமலை, நகராட்சி வாா்டு உறுப்பினா்கள் ஆ.மோகனவேல், கே.விஸ்வநாதன், க.கோவேந்தன், க.அகமத், கங்காதரன், அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் ஞானவேலு, பாா்த்தீபன், ராம்.ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.