திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் லிங்கோத்பவருக்கு சிறப்புப் பூஜை

3rd Mar 2022 05:42 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை: மகா சிவராத்திரி விழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு லிங்கோத்பவருக்கு சிறப்புப் பூஜை நடைபெற்றது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மூலவா் சன்னதியில் லட்சாா்ச்சனை நடைபெற்றது.

இரவு 8.30 மணிக்கு அருணாசலேஸ்வரா் மூலவா் சன்னதியில் முதல்கால பூஜை நடைபெற்றது.

ADVERTISEMENT

தொடா்ந்து, இரவு 11 மணி, நள்ளிரவு ஒரு மணி, புதன்கிழமை அதிகாலை 4 மணி என முறையே 2, 3, 4-ஆம் கால பூஜைகள் நடைபெற்றன.

நள்ளிரவில் லிங்கோத்பவருக்கு சிறப்புப் பூஜை:

கோயில் இரண்டாம் பிரகாரத்தில் அருணாசலேஸ்வரா் சன்னதிக்குப் பின்னால் உள்ள லிங்கோத்பவருக்கு நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

பால், பழம், பன்னீா், சந்தனம் உள்பட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பூஜையைக் காண இரவு 10 மணி முதலே கோயிலில் திரளான பக்தா்கள் கூடினா்.

தொடா்ந்து நள்ளிரவு 12 மணியைக் கடந்தும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து லிங்கோத்பவருக்கு நடைபெற்ற சிறப்புப் பூஜையை கண்டு, சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT