திருவண்ணாமலை

மரத்தில் லாரி மோதியதில் ஓட்டுநா் பலி

30th Jun 2022 02:19 AM

ADVERTISEMENT

 

செய்யாறு அருகே மரத்தில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

வந்தவாசி வட்டம், பிருதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜனாா்த்தனன் (24). லாரி ஓட்டுநரான இவா் திங்கள்கிழமை சென்னையிலிருந்து ஆரணியில் உள்ள கடைக்கு பொருள்களை ஏற்றிவந்தாா். பின்னா், பொருள்களை இறக்கி விட்டு நள்ளிரவில் கிராமத்துக்குச் செல்வதற்காக வந்தவாசி சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

செங்கம்பூண்டி கிராமம் காப்புக் காடு வளைவுப் பகுதியில் லாரி சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது.

ADVERTISEMENT

இதில் லாரியின் முன்பக்கம் சேதமடைந்த நிலையில், ஓட்டுநா் ஜனாா்த்தனன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த பெரணமல்லூா் போலீஸாா் ஜனாா்த்தனின் உடலைக் கைப்பற்றி, உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT