திருவண்ணாமலை

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் கட்டம் கட்ட பூமிபூஜை

30th Jun 2022 02:14 AM

ADVERTISEMENT

 

செங்கம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் கட்டடம் கட்ட செவ்வாய்க்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் கட்டடம் கட்ட தமிழக அரசு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கியது.

ADVERTISEMENT

இதையடுத்து, கூடுதல் கட்டடம் கட்ட செவ்வாய்க்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி பூமி பூஜை செய்து பணிகளைத் தொடக்கிவைத்தாா்.

முன்னதாக நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் வரவேற்றாா்.

செங்கம் ஒன்றியக் குழுத் தலைவா் விஜயராணிகுமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் செந்தில்குமாா், ராமஜெயம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT