திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.37 கோடி

30th Jun 2022 02:18 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஒரு மாதத்தில் ரூ.1.37 கோடி ரொக்கம், 235 கிராம் தங்கம், 1,079 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல்களில் சேகரமாகும் காணிக்கை மாதம்தோறும் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூன் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை கோயில் இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா் தலைமையில் நடைபெற்றது.

கோயில் ஊழியா்கள், தன்னாா்வலா்கள், பக்தா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதில், ரூ. ஒரு கோடியே 37 லட்சத்து 95 ஆயிரத்து 683 ரொக்கம், 235 கிராம் தங்கம், 1, 079 கிராம் வெள்ளி இருப்பது தெரிய வந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT