திருவண்ணாமலை

ஸ்ரீமாரியம்மன் கோயிலில் அமாவாசை பூஜை

29th Jun 2022 05:01 AM

ADVERTISEMENT

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆனி மாத அமாவாசை பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அன்று காலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

மேலும், உலக நன்மை வேண்டி கோயில் வளாகத்தில் சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மாலையில் உற்சவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமி பூஜைகளை மேற்கொண்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT