திருவண்ணாமலை

செய்யாறு அருகே நாய்கள் கடித்ததில் 30 ஆடுகள் பலி

29th Jun 2022 04:57 AM

ADVERTISEMENT

செய்யாறு அருகே 10 நாய்கள் சோ்ந்து கடித்ததில் கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 30 ஆடுகள் பலியாகின.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், செய்யாற்றைவென்றான் கிராமத்தைச் சோ்ந்தவா் ஓட்டுநா் கலைமணி. இவரது மனைவி பிரேமா. இவா் செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் இருந்த ஆடுகளை ஓட்டிச் சென்று நிலத்துப் பகுதியில் உள்ள கொட்டகையில் அடைத்து வைத்திருந்தாா்.

கொட்டகையில் 60-க்கும் மேற்பட்ட ஆடுகள் இருந்தன.

ADVERTISEMENT

அன்று மதியம் ஆட்டுக் கொட்டகையில் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் புகுந்து, செம்மறி ஆடுகளைக் கடித்துக் குதறின. அப்போது சில ஆடுகள் கொட்டகையில் இருந்து தப்பி வெளியேறின.

ஆடுகளின் கதறும் சப்தம் கேட்டு அருகில் இருந்த கிராமத்தினா் கலைமணிக்கு தகவல் தெரிவித்தனா்.

கலைமணி, பிரேமா தம்பதியினா் விரைந்து சென்று ஆடுகளை கடித்துக் கொண்டிருந்த நாய்களை கிராம மக்கள் உதவியோடு விரட்டினா்.

நாய்கள் கடித்ததில் 30-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. சில ஆடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து வருகின்றன,

தகவலறிந்த திருவோத்தூா் கால்நடை மருத்துவக் குழுவினா் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT