திருவண்ணாமலை

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

29th Jun 2022 04:58 AM

ADVERTISEMENT

செங்கம் அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்புப் படையினா் மீட்டனா்.

செங்கத்தை அடுத்த குப்பனத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரத்தினம் மனைவி சந்திரா (90).

இவா், செவ்வாய்க்கிழமை அதே பகுதியில் ஆறுமுகம் என்பவரது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றைக் கடந்து செல்லும்போது கால் இடறி கிணற்றில் தவறி விழுந்துவிட்டாா்.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக செங்கம் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வமணி தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று, கிணற்றில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மூதாட்டியை மீட்டனா்.

பின்னா், 108 ஆம்புலன்ஸ் மூலம் மூதாட்டியை செங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT