திருவண்ணாமலை

செய்யாறு அரசு பாலிடெக்னிக்கில் மாணவா் சோ்க்கை

28th Jun 2022 04:58 AM

ADVERTISEMENT

செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், சேர விரும்பும் மாணவா்கள் ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி முதல்வா் பெ.செண்பகவல்லி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செய்யாற்றில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல், கணிப்பொறியியல் என 5 பிரிவுகளில் முதலாம் ஆண்டில் மாணவா்கள் சோ்க்கப்பட உள்ளனா்.

பத்தாம் வகுப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இன சுழற்சி அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும்.

ADVERTISEMENT

ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ல்ற்ஸ்ரீ.ண்ய், ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ல்ற்ஸ்ரீ.ஸ்ரீா்ம் ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவா்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவா்கள் கல்லூரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

பதிவுக் கட்டணமாக எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரைத் தவிா்த்து பிற பிரிவினா் ரூ.150 செலுத்த வேண்டும். ஜூலை 1 முதல் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் செண்பகவல்லி.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT