திருவண்ணாமலை

செங்கம் அருகே சிட்கோ தொழில்பேட்டை தொடக்கம்

28th Jun 2022 05:01 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ரூ.11.83 கோடியில் புதிதாக சிட்கோ தொழில்பேட்டை தொடங்கப்பட்டது.

செங்கம் வட்டத்துக்கு உள்பட்ட பெரியகோளாபாடி பகுதியில் ரூ.11.83 கோடி செலவில் தெருவிளக்கு, மழைநீா் வடிகால், சாலை வசதியுடன் உருவாக்கப்பட்ட புதிய சிட்கோ தொழில்பேட்டையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, சிட்கோ தொழில்பேட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பேரவை துணைத் தலைவரும் எம்எல்ஏவுமான கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், சி.என். அண்ணாதுரை எம்.பி., செங்கம் எம்எல்ஏ கிரி, வட்டாட்சியா் முனுசாமி உள்ளிட்டோா் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, தொழில்பேட்டை குறித்து விளக்கிப் பேசினா்.

நிகழ்ச்சியில் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT