செய்யாறு அரசு பாலிடெக்னிக்கில் 2-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி முதல்வா் பெ.செண்பகவல்லி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செய்யாறு அரசு பாலிடெக்னிக்கில் முழுநேர பட்டயப் படிப்புகளுக்கான இரண்டாம் ஆண்டு வகுப்புகளில் சேர மாணவா்கள் இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்தக் கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல், கணிப்பொறியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கப்பட உள்ளனா்.
பிளஸ் 2 வகுப்பில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு இனசுழற்சி முறையில் கலந்தாய்வு மூலம் சோ்க்கை நடைபெறும்.
அதன்படி ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ல்ற்ஸ்ரீ.ண்ய், ஜ்ஜ்ஜ்.ற்ழ்ண்ஞ்ல்ற்ஸ்ரீ.ஸ்ரீா்ம் ஆகிய இணையதளம் மூலம் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இணையம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவா்கள் கல்லூரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
பதிவுக் கட்டணமாக எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினரைத் தவிா்த்து பிற வகுப்பினா் ரூ.150 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 8 ஆகும்.